இலங்குடி ஸ்ரீ பகற்சால மூர்த்தி ஐயனார் கோவில் காலை 09:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை தினமும் திறந்திருக்கும்.
அபிஷேகங்கள் செய்ய விரும்புவோர் காலை 10:30 மணிக்கு முன்பாக கோவிலுக்குச் சென்று விபரம் தெரிவிக்க வேண்டும். அப்பொழுது தான், உச்சிக்கால பூஜைக்கு முன், நிவேத்தியங்கள் செய்து, அபிஷேகங்கள் செய்யப் போதுமான நேரம் இருக்கும்.
உச்சிக்கால பூஜை மதியம் 12:00 மணி அளவில் தினமும் நடைபெறும்.
உச்சிக்கால பூஜைக்குப் பிறகு, அபிஷேகங்கள் செய்யப்பட மாட்டாது.
ஒவ்வொரு வருடமும் தை மாதம் 29ம் நாள் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.
வருடமொருமுறை சிவராத்திரி அன்று, நான்கு கால பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மற்ற நாட்களில் ஒரு கால பூஜை செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் மார்கழி மாதம், பொதுமுறையாக பூஜைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, இலங்குடி ஊர் பொதுமக்களால் மே அல்லது ஜூன் மாதத்தில் ஊர் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
The temple is open daily from 9:00 AM to 3:00 PM.
Devotees who wish to perform abhishegam should reach the temple and inform the priest before 10:30 AM, so there is time to prepare the offerings and perform the abhishegam before the Uchikala Pooja.
The Uchikala Pooja is performed daily at about 12 noon.
No abhishegam is performed after the Uchikala Pooja.
Varushabhishegam is celebrated every year on the 29th day of the Tamil month Thai.
On Sivarathri, four kala poojas are performed grandly; on other days one kala pooja is performed.
Every year in the month of Margazhi, poojas are performed in common (Pothumurai).
Once in two years, the people of Ilangudi celebrate the village festival (Oor Thiruvizha) in May or June.