சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்கும் சிறப்புடைய நகரத்தார்கள் குலதெய்வ வழிபாடு செய்த பின்னரே எந்த ஒரு நற்செயலையும் துவங்கும் மரபுடையவர்கள். இலங்குடி கிராமத்தில் அருளாட்சி செய்யும் பாலையடியான் பகற்சால மூர்த்தி ஐயனாரை வணங்கும் நகரத்தார்கள் சுமார் 30 ஊர்களில் ஏறக்குறைய 4000 புள்ளிகள் உள்ளனர்.
தேவகோட்டை அரு.லெ. குடும்பத்தினரால் திருக்குட நன்னீராட்டு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கான தேதி முதலிய விபரங்கள் நமக்கு தெரியவில்லை.
பிரமோதூத ஆண்டு வைகாசி திங்கள் 26ம் தேதி (08-06-1930) ஞாயிற்றுக்கிழமை முதல் திருக்குட நீராட்டு விழா நடைபெற்று இருக்கிறது. காரைக்குடி திரு. ஆவி.ப.முரு.மு. முருகப்ப செட்டியார் அவர்கள் முன்னிலையில் கோயில் திருப்பணிகள் செய்து அஷ்டபந்தன மருந்து சாத்தி திருக்குட நீராட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. அதுசமயம் நகரத்தார்கள் வசதிக்காக ஐயா அவர்கள் நகர விடுதி ஒன்றும் கட்டி இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறகு திருமதி தெய்வானை ஆச்சி அவர்களால் பலமுறை விடுதி பழுது பார்க்கப்பட்டு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
துந்துபி ஆண்டு ஆனித் திங்கள் 17ம் தேதி (01-07-1982) வியாழக்கிழமை காரைக்குடி திரு. மெ.நா.சித. சிதம்பரம் செட்டியார் அவர்கள் தலைமையில் இரண்டாவது திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று இருக்கிறது.
வெகுதான்ய வருடம் ஆனி மாதம் 22ம் தேதி (06-07-1998) திங்கட்கிழமை காரைக்குடி திரு. மெ.செ.ச.மு.மெ. முத்துராமன் செட்டியார் தலைவராகவும், காரைக்குடி திரு. மெ. மெய்யப்ப செட்டியார், தேவகோட்டை திரு. SM.L. வெள்ளையன் செட்டியார், ஓ. சிறுவயல் திரு. லெ. சபாரத்தினம் செட்டியார் உபதலைவர்களாகவும் பழ. சிதம்பரம் செட்டியார் செயலாளராகவும், காரைக்குடி திரு. மெ.நா.சித. நாகப்ப செட்டியார், தேவகோட்டை திரு. கரு. பழனியப்ப செட்டியார் இணை செயலாளராகவும் உள்ள நிர்வாக குழு முயற்சியால் மூன்றாவது திருக்குட நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
திருக்குட நீராட்டு விழா நடைபெற்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் வேளார்கள் நகரத்தார்களிடம் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க இலங்குடி நகர விடுதியில் விக்ருதி வருடம் ஆனி மாதம் 22ம் தேதி (06-07-2010) செவ்வாய்கிழமை அன்று நகரத்தார்கள் கூடி கோபுரங்கள் பழுதுபார்த்து புதிதாக வர்ணம் பூசி மற்றும் கருப்பர் மண்டபம், சுப்பிரமணியர் மண்டபம், இராஜகோபுரத்தின் முன் மண்டபம் புதிதாக கட்டி குடமுழுக்கு நடத்துவது என்று தீர்மானித்து நிர்வாக குழு ஒன்று அமைத்தார்கள்.
| தலைவர் | திரு. லெ. சபாரெத்தினம் செட்டியார் |
| துணைத்தலைவர்கள் | திரு. சோம.லெ. வெள்ளையன் செட்டியார் திரு. நா. மெய்யப்ப செட்டியார் திரு. RM. S. சதாசிவம் செட்டியார் திரு. மெ.செ.ராம. மெய்யப்ப செட்டியார் திரு. R. திருநாவுக்கரசு செட்டியார் திரு. அழ. சி. அழகப்ப செட்டியார் |
| செயலாளர்கள் | திரு. முரு.பழ. சிதம்பரம் செட்டியார் திரு. மெ.நா.சித. நாகப்ப செட்டியார் |
| பொருளாளர்கள் | திரு. AVM. PL. சந்துரு செட்டியார் திரு. கரு. பழனியப்ப செட்டியார் |
மேற்கண்ட நிர்வாக குழுவினருடன் 70 உறுப்பினர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
விக்ருதி வருடம் ஐப்பசி மாதம் 4ம் தேதி (21-10-2010) பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டு புதிய மண்டபங்கள் கட்டப்பட்டு கோபுர சுதை வேலைகள் பழுது பார்க்கப்பட்டு கோயில் முழுவதும் கிராணைட் கற்களால் தளம் அமைக்கப்பட்டு கர்ப்பக்கிரஹ சுவர்களும் டைல்ஸ் பதிக்கப்பட்டு புதிதாக மின் வேலைகள் பார்க்கப்பட்டு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து, மேடைகாளிக்கு அருகில் உள்ள பழைய தடுப்புச் சுவரை இடித்து, இடத்தை விரிவுபடுத்தி புதிதாக மதில் சுவர் கட்டப்பட்டு இருக்கிறது. முன்னோடியான் (முனீஸ்வரர்) சிலை ஒன்று புதிதாக செய்யப்பட்டு சன்னதி ஒன்றும் மதில்சுவர் அருகில் கட்டப்பட்டு இருக்கிறது. இராஜகோபுரத்தில் இருந்த பைரவர் சன்னதியும் சுப்பிரமணியர் மண்டபத்தில் தெற்கு பார்க்க புதிதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. பழைய மடப்பள்ளி இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு இருக்கிறது. மர யானை வாகனம் ஒன்றும் புதிதாக செய்யப்பட்டு அதை பாதுகாப்பதற்காக மடப்பள்ளியை ஒட்டி மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. ஐயனார் கர்ப்பக்கிரஹமும் முன் கல் மண்டபமும் வாட்டர் வாஷ் செய்யப்பட்டு ஆயில் பாலீஷ் செய்யப்பட்டு உள்ளது. ஊரணியைச் சுற்றி முள் வேலி அமைத்து தென்னை மரங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவில் இரண்டு யாகசாலைகள் அமைக்கப்பெற்று, ஐயனாருக்கு கமல வேதிகை அமைத்து பஞ்ச குண்டங்களும், பரிவார தேவதைகளுக்கு 10 வேதிகையும், 10 குண்டங்களும் அமைக்கப்பட்டு யாக பூஜை 26-01-2012 வியாழக்கிழமை மாலை 6:45 மணி அளவில் தொடங்கி ஆறு கால பூஜையாக சிறப்பாக நடைபெற்றது.
பொன்புதுப்பட்டி பிரமஶ்ரீ T. கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார், ஹரிஹர சிவாச்சாரியார் சர்வ சாதகமாக இருக்க வேளார் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர், வெளியூர் சிவாச்சாரியார்களைக் கொண்டு கர வருடம் தை மாதம் 15ம் தேதி (29-01-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 08:05 மணி முதல் 09:30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இனிதே நடைபெற்றது. அன்று இரவு புதிதாக செய்த யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் சிறப்பாக நடைபெற்றது.
இப்புனித நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெற காரணமான திருப்பணி குழுவினரை குறிப்பிட்டு பாராட்டி சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்.
Nagarathars, who worship Lord Shiva as the Supreme God, begin every good undertaking only after worshipping their family deity. About 4,000 Nagarathar families from some 30 villages worship Palaiyadiyan Bagachaala Moorthy Ayyanar of Ilangudi.
A consecration (Thirukkuda Nanneerattu) was once performed by the Aru.Le. family of Devakottai; its date and details are not known.
On Sunday, 8 June 1930 (Pramoduta year, Vaikasi 26), the Kumbabhishegam was held in the presence of Thiru. Avi.Pa.Muru.Mu. Murugappa Chettiar of Karaikudi, after renovation of the temple and Ashtabandhana. He also built a Nagara Viduthi (rest house) for the Nagarathars, later maintained and repaired many times by Thirumathi Deivanai Aachi.
The second Kumbabhishegam was held on Thursday, 1 July 1982 (Dundubhi year, Aani 17), led by Thiru. Me.Na.Sitha. Chidambaram Chettiar of Karaikudi.
The third Kumbabhishegam was held on Monday, 6 July 1998, through the efforts of the committee led by Thiru. Me.Se.Sa.Mu.Me. Muthuraman Chettiar of Karaikudi.
At the request of the Velars, the Nagarathars met at the Ilangudi Nagara Viduthi on 6 July 2010 and resolved to renovate the gopurams and build the Karuppar, Subramaniar and Rajagopuram front mandapams, forming a Thiruppani committee with 70 members.
Balalayam was performed on 21 October 2010. New mandapams, granite flooring, electrical work, an overhead tank, a new compound wall, a new Munnodiyan (Muneeswarar) shrine, a relocated Bhairavar shrine, a new madappalli and a new wooden elephant vahanam were completed. Yaga pooja began on 26 January 2012 and the Kumbabhishegam was held on Sunday, 29 January 2012 (Thai 15), followed by the Swami procession on the new elephant vahanam that night.